Shareholic

Tuesday, December 31, 2019

உள்ளாடைகள் பேணுதல்



சமீபத்தில் ஒரு தகவல் என்னை கவர்ந்தது. அமெரிக்காவில் 40 சதவீதம் ஆண்கள், தங்களுடைய "அண்டர்வேர்" (ஜட்டி என்று சொல்லலாம்) நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மாற்றுகிறார்கள். இதை சோம்பேறித்தனம் என்று சொல்வதா; சிக்கனம் என்று சொல்வதா; அலட்சியம் என்று சொல்வதா; இல்லை மிகவும் ஏழைகள் என்று சொல்வதா? - என்று தெரியவில்லை. இதுவே, சைபீரியாவில் அல்லது  சிரியாவில் வாழும் ஆண்கள் செய்கிறார்கள் என்று சொன்னால், பணப்பற்றாக்குறை என்று ஒத்துக்கொள்ளலாம்.
சரி, நாம் விசயத்துக்கு வருவோம்.
ஆண்களை பொறுத்தவரையில் உள்ளாடைகள் என்பது உள்ளே அணியக்கூடிய பனியன்கள் மற்றும் அண்டர்வேர்கள. இவற்றை தினமும் மாற்ற வேண்டும். அதிகப்படியான வியர்வை சுரக்கும் உடலமைப்பு கொண்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தரம் மாற்றிக்கொள்ளலாம். அதிகம் ஆண்கள், வீட்டில் இருக்கும்போது, மேலாடைகள் (பனியன் மற்றும் சட்டைகள்)  அணிவதில்லை.
உள்ளாடைகள், நம்முடைய உடலில் இருந்து சுரக்கும்  வியர்வையை உறிஞ்சும் தன்மை உள்ளவை. அதற்காகத்தான் நாம் அவற்றை  அணிகிறோம். பனியன் இல்லாமல், சட்டை அணிந்து செல்பவர் வியர்வை நாற்றத்தை வெளிக்காட்டுபவராகத்தான் இருப்பார். நாம்  அணியக்கூடிய அண்டர்வேர்கள் , வியர்வை உறிஞ்சுவது மட்டுமில்லாமல், ஒரு பாதுகாப்பு கவசமாகவும் உள்ளது.
காலையில் குளிக்கப்போகும்போது, ஒரு கிருமி நாசினி(Antiseptic) பாட்டிலயும் (eg. Dettol)  உடன் எடுத்து செல்லுங்கள். நன்றாக குளித்து முடித்தவுடன், உங்கள் பழைய ஜட்டியை தண்ணீரில் நனைத்து நன்றாக அலசவும். கடைசியாக ஒரு மூடி டெட்டோல் புதிய தண்ணீரில் கலந்து, அதில் ஜட்டியை மீண்டும் அலசவும். இப்பொழுது காயப்போடுங்கள். இந்த முறையால், கண்ணுக்கு தெரியாத நுண்கிருமிகள், அழிந்து போகின்றன. ஜட்டி காய்ந்தவுடன் அவற்றை பயன்படுத்தும்போது நமக்கு எந்தவித பயமும் இல்லை. இது ஒரு சுகாதாரமான முறையாகும். நோய் நொடியிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள பயன்படுகிறது. இந்த முறையை பெண்களும் கடைபிடிக்கலாம்.


No comments: