Shareholic

Tuesday, December 31, 2019

ஆரோக்கியமான தோலை பெறுவதற்கு



தோல் வனப்பாக இருக்கவேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள் .ஆனால்  இந்த விஷயத்தில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அது இயற்கையான ஒரு ஆர்வம் என்று சொல்லலாம்.
தோல் வனப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக, கடைகளில் இருக்கும் பலவிதமான கிரீம்களை பயன்படுத்துவது நல்லது இல்லை. எல்லா க்ரீம்களிலும் ஒரு விதமான கெமிக்கல் கலப்பு இருக்கத்தான் செய்யும். நமது சரீரத்திற்கு  எந்த வகையில் அது ஒத்து வரும் என்பது தெரியாத நிலையில் அவற்றை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.
தோல் என்பது நமது உடலின் ஒரு பகுதி. மற்ற உறுப்புகளை போல, இரத்த நாளங்களின் மூலம் கிடைக்கும் சத்துக்கள் தான் தோலின் தன்மைக்கு காரணம்.
நமது சருமம், ஆரோக்கியமானதாக இருப்பதற்கும், உலராமல் இருப்பதற்கும், உணவு முறைகளில் மாற்றங்கள் கொண்டு வரலாம். நமது அன்றாட சாப்பாட்டு மெனுவில் பப்பாளி, நெல்லிக்காய், கொய்யாப்பழங்கள், திராட்சை பழங்கள் இருக்குமாறு பார்த்துக்கொண்டால், நாளடைவில் சருமத்தில் நல்ல மாற்றங்களை நாம் கண் கூடாக பார்க்கலாம்.
உணவிற்கு அரை மணிக்கு முன்பாக எதாவது ஒரு பழ வகையை உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

No comments: