Shareholic

Thursday, June 13, 2019

கணக்கு விபரங்களைக் கையாளுதல்



தேவையான கணக்கு விபரங்களை தயார் செய்து அவற்றைப் பராமரிக்க வேண்டியது நிர்வாகங்களின் பொறுப்பாகும்.
எல்லாவிதமான செலவினங்கள் மற்றும் வருமானம் சம்பந்தமான விபரங்களை உடனுக்குடன் பதிவு செய்து கணக்குளைச்சரி செய்தல் மிக முக்கியம்.
நிறுவன நிர்வாகிகள் அல்லது நியமிக்கப்பட்ட ஊழியர்கள் நிறுவனம் சம்பந்தபப்ட்ட வரவு, செலவு  விபரங்களைத் தவறாது கண்காணித்து வர வேண்டியது மிகவும் அவசியம்.
தேவையில்லாத அல்லது அளவுக்கு அதிகமான செலவினங்களைக் கண்டறிந்து அவற்றை உடனுக்குடன் நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி செய்ய வேண்டும்.
"ஒரு ரூபாய் சேமிப்பது என்பது ஒரு ரூபாய் சம்பாதிப்பது என்று எண்ண வேண்டும்"
செலவினங்களைக்குறைப்பது என்பது மற்றொரு வகையில் வருமானத்தைப் பெருக்குவது அல்லது இலாபத்தைக் கூட்டுவதோ ஆகும்.

.சமபாட்டுப்புள்ளி



எல்லா நிறுவனங்களின் நிர்வாகிகளும் எப்படியாவது இலாபம் சம்பாதித்து விட வேண்டும் என்று தான் விரும்புகின்றனர்.
தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுவன நிர்வாகிகள் தங்களுடைய நிறுவனங்களின் இலாபம் குறைந்து கொண்டு வருவது காணும்பொழுது குறைந்த பட்சம் " சமபாட்டுப்புள்ளியிலாவது நிறுவனங்களை நிலைநிறுத்தி விட வேண்டும் என்று விரும்புகின்றார்கள் மற்றும் முயற்சி செய்கிறார்கள்.
சமபாட்டுப்புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகள் அந்த நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு உணர்த்தும் மறைமுகமான எச்சரிக்கைகள் என்னவென்றால் - "இதுவரை நீங்கள் கடைபிடித்த நிறுவன வழிமுறைகளில் உடனடியாக மாற்றங்களைக் கொண்டு வாருங்கள். இல்லையேல் உங்கள் நிறுவனம் நட்டத்தில் இயங்கும் நிறுவனமாக மாறக்கூடும்.
உங்கள் நிறுவனங்களின் மோசமான செயல்பாடுகளுக்கான காரணிகளைக் கண்டு அவற்றை களைய முயலுங்கள். ஒருவேளை சரியான நிலவரங்களை அறிவதிலும் கண்டு அறிந்து அதற்கான காரணிகளையும் குறைகளையும் உடனுக்குடன் சரி செய்யத் தவறும் பட்சத்தில் உங்கள் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதை  நீங்கள் ஒரு போதும் தடுக்க இயலாது. இதற்கும் மேலாக ஒரு கால கட்டத்தில் உங்கள் நிறுவனத்தில் எந்த விதமான பயனுள்ள மாற்றங்களையும் கொண்டு வர முடியாமல் தவிக்கும் நீங்கள் உங்கள் நிறுவனத்தை மூட அல்லது வேறு ஒருவருக்கு விற்று விட வேண்டிய நிர்ப்பந்தங்களுக்குத் தள்ளப்படலாம்.
ஆகவே விரைந்து செயல்பட்டு, காரண காரணிகளை கண்டு அறிந்து நிறுவனம் சமபாட்டுப்புள்ளியைக் கடந்து இலாபம் ஈட்டுவதற்கான வழிமுறைகளைத் தேடி கண்டுபிடியுங்கள்.
வியாபார நிறுவனத்திற்குத் தேவையான முக்கிய நிர்வாகத் தளங்களைப் பற்றி கீழே காண்க:
- தேவையான கணக்கு விபரங்களைக் கையாளுதல் – Maintenance of proper books of accounts;
-  நிதி நிர்வாகம் – Finance management;
- மனித வள நிர்வாகம் – Human resources management;
- சந்தைப்படுத்துதல் நிர்வாகம்Marketing management;
- விற்பனை நிர்வாகம் – Sales management;
- வசூலிப்பு நிர்வாகம் – Recovery management;
- பொருட்கள் பராமரிப்பு நிர்வாகம் – Inventory management;
- மாற்றங்கள் உருவாக்கும் நிர்வாகம் Change management;