Shareholic

Tuesday, December 31, 2019

பல் தேய்க்கும் பிரஷ் பராமரிக்கும் முறைகள்



பல் தேய்த்து  முடித்த பின் எல்லோரும் அந்த பிரஷை மறந்து விடுகிறார்கள். சில சமயம், அந்த பிரஷ் ஒரு டேபிளின் மேல் இருக்கும்; கிட்சேன் சன்னலில் இருக்கும்; பாத்  ரூமில் சோப்பு டப்பா அருகில் இருக்கும். ப்ரஸின் மேலுள்ள புற்கள்  போன்ற மிருதுவான பகுதியை பாதுகாக்க  வேண்டும். இதற்கு, கடைகளில் சிறு  மூடிகள் (பேனா மூடிகள் போல) கிடைக்கின்றன. பிரஷ் தேய்ப்பதற்கு  முன்பாக, பிரஷை நன்றாக தண்ணீரால் கழுவிய பின்னர்  உபயோகிக்க வேண்டும். இரவில், புற்கள்  போன்ற மிருதுவான பகுதியை கரப்பான்  பூச்சிகள்,  சிறு சிறு பூச்சிகள், பல்லி போன்றவைகள் வாய்  வைப்பதற்கான சந்தர்ப்பங்கள்  அதிகம் உண்டு. தண்ணீர் விட்டு நன்றாக கழுவாமல் பேஸ்டை தடவி விட்டு உபயோகிக்கும்போது, அதன்  காரணமாக நோய் தொற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

No comments: