Shareholic

Tuesday, December 31, 2019

பனங்கிழங்கின் பயன்கள்



பனம்  கிழங்கு சென்னை போன்ற இடங்களில் அதிகம் கிடைப்பது இல்லை. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம் இருப்பதால் பனம்  கிழங்குகள் தாராளமாக கிடைக்கின்றன. பனம்  கிழங்கை நன்றாக  சுத்தம் செய்து வேக வைத்து, சிறு சிறு துண்டுகளாக வெட்டி சாப்பிடலாம். ருசியாக இருக்கும். பனம்  கிழங்கில் நார்  சத்துக்களும் மிகவும் அதிகம். தீராத மலச்சிக்கல் உள்ளவர்கள் தொடர்ந்து பனம்  கிழங்கு சாப்பிட்டு வர, மலச்சிக்கல் குறைந்து நிவாரணம் கிடைக்கும். மலச்சிக்கல் குறைந்தவர்கள் உடலில், இரத்த  ஓட்டம் ஒரே சீராக இருக்கும். சருமம் பள  பளப்பாக இருக்கும். இளமையாக தோற்றம் அளிப்பார்கள்.
மேலும், பனம்  கிழங்கு பித்த மேகம் மற்றும் அஸ்தி சூடு போன்றவற்றை நன்கு குணமாக்கும். அஸ்தி சூடு என்பது ஆசன வாய்  சூடு என்பதாகும்.

No comments: