ஒரு
வியாபார நிறுவனம் என்பதை
நாம் மூன்று
வகையாக பிரிக்கலாம்.
சேல்ஸ்
யூனிட்ஸ் (Sales Units) - பொருட்களை குறைந்த
விலைக்கு வாங்கி அதை
சிறிதளவு அதிக
விலைக்கு விறகும் வியாபார
நிறுவனங்கள்.
உற்பத்தி நிறுவனங்கள் (Manufacturing
Units) - மூலப்பொருட்களை வாங்கி அவற்றிற்கு
மதிப்புக்கூட்டி சந்தை
பொருட்களாக மாற்றும்
உற்பத்தி நிறுவனங்கள்.
சேவை
நிறுவனங்கள் (Service Units) - வாடிக்கையாளர்களுக்கு தேவையான
சேவைகளை செய்து
தரும் சேவை
நிறுவனங்கள்.
எல்லா
வியாபார நிறுவனங்களும்
அன்றாடம் பலவகையான
செலவுகளை செய்கின்றன.
மூலப்பொருட்கள் பெறுவதற்கான
செலவுகள்; பணியாளர்களுக்கு தரப்படும் சம்பளம் மற்றும்
கூலி; கடைகள்
மற்றும் தொழிற்சாலைகளுக்கான வாடகை செலவுகள் மற்றும்
பலவகையான செலவுகள்.
அவ்வகையில் வியாபார நிறுவனங்கள் பல்வேறு வகைகளில்
வருமானம் ஈட்டுகின்றன.
பொருட்களை விற்பதன்
மூலம் மற்றும்
பல்வேறு வகையான
சேவைகள் செய்வதன்
மூலம் வருமானம் ஈட்டுகின்றன.
எல்லாவகையான செலவுகளையும் ஒருங்கிணைத்து அவற்றை
"Expenditure" - அதாவது "செலவு/
செலவினங்கள்" என்று
நாம் கூறுகிறோம்.
எல்லாவகையான வருமானங்களையும் ஒருங்கிணைத்து அவற்றை
நாம் "Income" அல்லது "வரவு/ வருமானம்" என்று
கூறுகின்றோம்.
ஒரு
நிறுவனத்தின் வருமானமானது
செலவைக்காட்டிலும் அதிகமாக
இருக்கும் பட்சத்தில்
அதை இலாபம்
ஈட்டும் நிறுவனம்
என்று கூறுகின்றோம்.
ஒரு
நிறுவனத்தின் வருமானமானது
செலவைக்காட்டிலும் குறைவாக
இருக்கும் பட்சத்தில்
அதை நட்டத்தில்
இயங்கும் நிறுவனம்
என்று கூறுகின்றோம்.
இவற்றிற்கு மாறாக, ஒரு நிறுவனத்தின்
வருமானமானது அந்த
நிறுவனத்தின் செலவை
ஒட்டியோ அல்லது
ஒரே மாதிரியாகவோ
இருக்கும் பட்சத்தில்
அந்த சம
நிலைப்பாட்டை நாம்
"Break Even Point" அல்லது "சமபாட்டுப்புள்ளி"
என்று கூறுகின்றோம்.
எனவே
சமபாட்டுப்புள்ளி என்பது
பொருட்கள், சேவைகள்
மற்றும் உற்பத்தி
வழங்களின் போது
ஏற்படுகின்ற செலவும், வருமானமும் சமப்படும்
புள்ளியாகும். இப்புள்ளியில்
இலாபம் காணப்படமாட்டாது.
அதே போல்
நட்டமும் காணப்படமாட்டாது.