Shareholic

Tuesday, December 31, 2019

சத்து நிறைந்த ஐந்து மாவு கஞ்சி



ஹார்லிக்ஸ் போன்ற பொருட்களை பற்றிய விளம்பரங்கள் நிறைய வருகின்றன. நமக்கு அவற்றில் ஆர்வம்  ஏற்படுகிறது. அவற்றை பற்றிய ஆராய்ச்சியை விட்டு விட்டு, நமக்கு கிடைக்கும் பொருட்களிலிருந்து எதாவது பயன் பெற முடியுமா என்று பார்த்தால், ஐந்து  பொருட்களால்  ஆன ஒரு கஞ்சி  நமது  கண்ணுக்கு படுகிறது.
இதை ஊட்டக்கஞ்சி என்று சொல்லுவார்கள்.
இதற்கு தேவையான ஐந்து பொருட்கள்- சுத்தமான அரிசி, உளுந்து, கடலைப்பருப்பு , துவரம்பருப்பு, சிறுபருப்பு. கடைகளில் சிரமம் இல்லாமல் கிடைக்கக்கூடியது. நன்றாக துடைத்து தூசி  நீக்கி வைத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் சம பங்கு எடுத்துக்கொள்ளவும். ஒவ்வொன்றும் அரை டம்ளர் என்று கொள்ளலாம். அவற்றை நன்றாக வாணலியில் வறுக்க வேண்டும். எண்ணெய்  விடக்கூடாது. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க விடுங்கள். மேலே  சொன்ன ஐந்து  பொருட்களை ஒரு மெல்லிய சுத்தமான துணி ஒன்றில் போட்டு முடிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது, பாத்திரத்தின் மேலே தோசை கரண்டியை குறுக்காக போடவும். அதில் இந்த துணி மூட்டையை தொங்க விடவும். மூட்டை தண்ணீருக்குள் முங்க  வேண்டும். இப்பொழுது தண்ணீர் கொதிக்க கொதிக்க மூட்டையின் உள்ளே இருக்கும் பொருட்கள் கரைந்து கரைந்து நீர் கஞ்சியாக மாறிவிடும். சுவைக்காக சிறிதளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடவும். அதிக சத்து நிறைந்தது. உங்களுக்கு நன்றாக தெரியும். எந்த கலப்படமும் கிடையாது. இப்பொழுது சத்து  மாவு  கஞ்சி என்று விற்கிறார்களே அது போல தான். காய்ச்சல் போன்ற நோயில் இருந்து விடுபட்டு  வந்தவர்களுக்கு இதை தினமும் கொடுக்க கொடுக்க, சீக்கிரம் வலு சேர்ந்து தங்கள் பணி  செய்ய கிளம்பி விடுவார்கள்.

No comments: