மலச்சிக்கல் என்பது மிகவும் மோசமானது.
இன்றைய கால கட்டத்தில், அதிகம்
நேரம் பிரயாணம் செய்பவர்கள் மற்றும் சிலர், மலத்தை
அடக்கி அடக்கி, மலம் வெளியேற்றும்
தசைகள் மற்றும் நரம்புகள் செயலற்று
போக வைத்து விடுகிறார்கள். வயது
ஆகும் போது தான்
இறுகிப்போன தசைகள் தனது சுய ரூபத்தை காட்ட ஆரம்பிக்கின்றன.
மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு, சிந்திக்கும் திறன் குறைய ஆரம்பிக்கிறது;
கோபம் அதிகமாக
வரும்; பொறுமை இருக்காது. மலச்சிக்கலை
போக்க நிறைய வழிகள் உள்ளன.
மிகவும் சுலபமான வழி - அதிகம்
தண்ணீர் குடியுங்கள்; அல்லது தண்ணீர்
நிறைந்த பானங்கள் அருந்துங்கள்; இரவு நேரம் படுக்கும்
முன்பாக, கொதிக்க வைத்து ஆற
வைத்த வெது
வெதுப்பான தண்ணீரை அருந்தி விட்டு
படுத்தால், வயிற்று தசைகள் நன்றாக
விரிந்து, மறுநாள் காலையில் சுலபமாக
மலம் வெளி வந்து விடும்.
பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும்.
மிகவும் முக்கியமாக - பப்பாளி பழங்கள், வாழைப்பழங்கள்
இவை நல்லது. நமக்கு கொஞ்சமும்
தேவையில்லாத பொருட்களை உடலில் தேக்கி வைத்து
என்ன லாபம்? திருமூலர்
சொன்ன வாக்குகளை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் - "உடல் வளர்ப்பது உயிர்
வளர்ப்பது ஆகும்".
No comments:
Post a Comment