Shareholic

Tuesday, December 31, 2019

அதிக தண்ணீர் குடிப்பது நல்லதா?




அதிக தண்ணீர் குடிப்பது கெட்டது இல்லை. ஆனால் அதே நேரத்தில் அதன் மூலம் பெரும் பலன்களும் கிடையாது. அதாவது அதன் மூலம் எந்தவிதமான உடல்நலம் சார்ந்த அதிகப்படியான பலனும் கிடையாது. நீங்கள் தண்ணீரை குடித்த ஒரு மணி நேரத்திற்குள் உங்களுக்கு மூத்திரம் கழிக்கவேண்டுமென உந்துதல் வந்தால், உங்கள் உடலில் தண்ணீர் தங்குவதில் பிரச்சினைகள் இருக்கிறது என்று அர்த்தம். சத்துக்களுடன் சேராத வெற்று தண்ணீர் எந்தவிதமான பலனும் தராமல் வெளியேறி விடுகிறது.
இதற்கு முன்னர் ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து கிளாஸ் தண்ணீர் குடிக்கவேண்டும் என்று சொன்னது உண்டு. இப்பொழுது என்ன சொல்கிறார்கள் என்றால் - ஒரு நாளைக்கு ஒரு மனிதன் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் கலந்த உணவு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
அதாவது - தண்ணீர், தண்ணீர் கலந்த ஜூஸ், தண்ணீர் கலந்த பால், தண்ணீர் கலந்த மோர்; இப்படியாக சிறிதளவு எதாவது சத்து கலந்த திரவ பொருட்களை எடுத்து கொள்ளும்போது அதிக பலன் ஒரு மனிதனுக்கு கிடைக்கும். பால் மற்றும் பால் சார்ந்த திரவ உணவுகளில் அதிக சத்துக்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. ஆனால் அதே நேரம், தாகத்திற்கு தகுந்தாற்போல் தண்ணீர் குடிப்பது மிக சிறந்தது. வெளியில் அதிகம் செல்பவர்களுக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படும். குளிர் மற்றும் மழை காலங்களில் தண்ணீரின் தேவை மிகவும் குறைவு தான்.
அதே நேரத்தில் தண்ணீர் அதிகம் குடித்து விட்டதால் கெடுதல் என்ற தவறான கருத்துக்களும் தேவை இல்லை. அவை மேலே சொன்னபடி வெளியேறி விடும் எந்தவித பலனும் தராமல்.

No comments: