Shareholic

Tuesday, December 31, 2019

பல் தேய்க்கும் முறை



இப்பொழுது எல்லோரும் கடைகளில்  கிடைக்கும் பிரஷ் வைத்து  தான் பல்  தேய்க்கிறார்கள். விளம்பரத்துக்காக வித விதமான பிரஷ்கள் சந்தையில் வர ஆரம்பித்து விட்டன. அவை அவசியம் இல்லை. ஒரே சீராக இருக்கக்கூடிய பிரஷ் வாங்கினால் போதுமானது. பல் தேய்க்கும்போது, இடது வலதாக தேய்க்காமல், மேலும் கீழுமாக தேய்க்கவேண்டும். முதலில் பற்களின் மேல் வரிசையில், இடது புறத்தில் ஆரம்பித்து, பின்னர் மத்திய பகுதிக்கு வந்து பின்னர் வலது புறம் மேலும் கீழும் தேய்க்கவேண்டும். இதனால் மேல் வரிசையிலுள்ள பதினாறு பற்களின் முன்பகுதி சுத்தமாகி விடும். இப்போது, அதே  போல், மேல்வரிசையின் உள்  பகுதியை சுத்தம் செய்யவேண்டும். இதே முறையில், கீழ் வரிசை பற்களின் முன் பகுதியையும் உள்  பகுதியையும் தேய்க்க வேண்டும். மிகவும் அழுத்தி தேய்க்க வேண்டியது இல்லை.அழுத்தி தேய்ப்பது பற்களை சேதப்படுத்தி விடும். நன்றாக தேய்த்து முடித்த பின், தண்ணீரால் கொப்புளித்து சுத்தம் செய்ய வேண்டும். காலையில் எழுந்தவுடன் மற்றும் இரவு படுக்க போகும் முன்பாக பல் தேய்ப்பது பல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

No comments: