உடல் சூட்டை தணிக்க எலுமிச்சை அதிகம் பயன்படுகிறது. ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி விட்டு அதன் சாற்றை அந்த தண்ணீரோடு சேர்க்கவும். சுவைக்காக ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கலாம். நன்றாக ஒரு தேக்கரண்டி மூலம் கலந்து குடித்தால் சூடு காணாமல் போய் விடும். வெயில் காலங்களில், ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை இந்த ஜூஸை குடிக்கலாம். சர்க்கரைக்கு பதிலாக சிறிதளவு உப்பை சேர்த்தும் சாப்பிடலாம்.
இன்னும் சுவை வேண்டுமென்றால், ஓரளவு புதினா இலைகளை எடுத்து அவற்றை நன்றாக சுத்தம் செய்து விட்டு, அதை இந்த கலவையுடன் கலந்து மிக்சியில் அரைத்து விட்டு பின்னர் சாப்பிட ருசி தூக்கலாக இருக்கும்.
புதினாவுக்கு பதிலாக, ஒரு தேக்கரண்டி சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டால்,சூடு தணிவதோடு, கல்லீரலும் பலம் பெரும்.
எலுமிச்சம் பழத்தின் சாற்றை இளம் சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்றுக்கு மிகவும் நல்லது.
No comments:
Post a Comment