Shareholic

Tuesday, December 31, 2019

தலையில் உள்ள பொடுகை விரட்ட






தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து சிறிது நேரம் கழித்து மிதமான சூடு உள்ள  நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும்.
தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தலையில் நன்றாக  தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சனை நீங்கும்.
வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.
தலைக்கு குளிக்கும்போது கடைசியாக குளிக்கும் தண்ணீரில் வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.
தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.
மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.


அதிக தண்ணீர் குடிப்பது நல்லதா?




அதிக தண்ணீர் குடிப்பது கெட்டது இல்லை. ஆனால் அதே நேரத்தில் அதன் மூலம் பெரும் பலன்களும் கிடையாது. அதாவது அதன் மூலம் எந்தவிதமான உடல்நலம் சார்ந்த அதிகப்படியான பலனும் கிடையாது. நீங்கள் தண்ணீரை குடித்த ஒரு மணி நேரத்திற்குள் உங்களுக்கு மூத்திரம் கழிக்கவேண்டுமென உந்துதல் வந்தால், உங்கள் உடலில் தண்ணீர் தங்குவதில் பிரச்சினைகள் இருக்கிறது என்று அர்த்தம். சத்துக்களுடன் சேராத வெற்று தண்ணீர் எந்தவிதமான பலனும் தராமல் வெளியேறி விடுகிறது.
இதற்கு முன்னர் ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து கிளாஸ் தண்ணீர் குடிக்கவேண்டும் என்று சொன்னது உண்டு. இப்பொழுது என்ன சொல்கிறார்கள் என்றால் - ஒரு நாளைக்கு ஒரு மனிதன் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் கலந்த உணவு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
அதாவது - தண்ணீர், தண்ணீர் கலந்த ஜூஸ், தண்ணீர் கலந்த பால், தண்ணீர் கலந்த மோர்; இப்படியாக சிறிதளவு எதாவது சத்து கலந்த திரவ பொருட்களை எடுத்து கொள்ளும்போது அதிக பலன் ஒரு மனிதனுக்கு கிடைக்கும். பால் மற்றும் பால் சார்ந்த திரவ உணவுகளில் அதிக சத்துக்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. ஆனால் அதே நேரம், தாகத்திற்கு தகுந்தாற்போல் தண்ணீர் குடிப்பது மிக சிறந்தது. வெளியில் அதிகம் செல்பவர்களுக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படும். குளிர் மற்றும் மழை காலங்களில் தண்ணீரின் தேவை மிகவும் குறைவு தான்.
அதே நேரத்தில் தண்ணீர் அதிகம் குடித்து விட்டதால் கெடுதல் என்ற தவறான கருத்துக்களும் தேவை இல்லை. அவை மேலே சொன்னபடி வெளியேறி விடும் எந்தவித பலனும் தராமல்.

உள்ளாடைகள் பேணுதல்



சமீபத்தில் ஒரு தகவல் என்னை கவர்ந்தது. அமெரிக்காவில் 40 சதவீதம் ஆண்கள், தங்களுடைய "அண்டர்வேர்" (ஜட்டி என்று சொல்லலாம்) நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மாற்றுகிறார்கள். இதை சோம்பேறித்தனம் என்று சொல்வதா; சிக்கனம் என்று சொல்வதா; அலட்சியம் என்று சொல்வதா; இல்லை மிகவும் ஏழைகள் என்று சொல்வதா? - என்று தெரியவில்லை. இதுவே, சைபீரியாவில் அல்லது  சிரியாவில் வாழும் ஆண்கள் செய்கிறார்கள் என்று சொன்னால், பணப்பற்றாக்குறை என்று ஒத்துக்கொள்ளலாம்.
சரி, நாம் விசயத்துக்கு வருவோம்.
ஆண்களை பொறுத்தவரையில் உள்ளாடைகள் என்பது உள்ளே அணியக்கூடிய பனியன்கள் மற்றும் அண்டர்வேர்கள. இவற்றை தினமும் மாற்ற வேண்டும். அதிகப்படியான வியர்வை சுரக்கும் உடலமைப்பு கொண்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தரம் மாற்றிக்கொள்ளலாம். அதிகம் ஆண்கள், வீட்டில் இருக்கும்போது, மேலாடைகள் (பனியன் மற்றும் சட்டைகள்)  அணிவதில்லை.
உள்ளாடைகள், நம்முடைய உடலில் இருந்து சுரக்கும்  வியர்வையை உறிஞ்சும் தன்மை உள்ளவை. அதற்காகத்தான் நாம் அவற்றை  அணிகிறோம். பனியன் இல்லாமல், சட்டை அணிந்து செல்பவர் வியர்வை நாற்றத்தை வெளிக்காட்டுபவராகத்தான் இருப்பார். நாம்  அணியக்கூடிய அண்டர்வேர்கள் , வியர்வை உறிஞ்சுவது மட்டுமில்லாமல், ஒரு பாதுகாப்பு கவசமாகவும் உள்ளது.
காலையில் குளிக்கப்போகும்போது, ஒரு கிருமி நாசினி(Antiseptic) பாட்டிலயும் (eg. Dettol)  உடன் எடுத்து செல்லுங்கள். நன்றாக குளித்து முடித்தவுடன், உங்கள் பழைய ஜட்டியை தண்ணீரில் நனைத்து நன்றாக அலசவும். கடைசியாக ஒரு மூடி டெட்டோல் புதிய தண்ணீரில் கலந்து, அதில் ஜட்டியை மீண்டும் அலசவும். இப்பொழுது காயப்போடுங்கள். இந்த முறையால், கண்ணுக்கு தெரியாத நுண்கிருமிகள், அழிந்து போகின்றன. ஜட்டி காய்ந்தவுடன் அவற்றை பயன்படுத்தும்போது நமக்கு எந்தவித பயமும் இல்லை. இது ஒரு சுகாதாரமான முறையாகும். நோய் நொடியிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள பயன்படுகிறது. இந்த முறையை பெண்களும் கடைபிடிக்கலாம்.


நம்மை வாழ வைக்கும் வாழை




வாழை என்றாலே வயிறு சம்பந்தமானது தான். முக்கியமாக மூன்று வழிகளில் வாழை நமக்கு பயனளிக்கிறது. வாழை இலை உணவு பரிமாறுவதற்கு; வாழை தண்டை உரித்து விட்டு, உள் பகுதியை துண்டு துண்டாக வெட்டி, கூட்டு செய்யலாம்; அல்லது வாழைத்தண்டு சாம்பார் செய்யலாம்; வாழைத்தண்டு சத்து  நிறைந்தது என்று சொல்ல முடியாது; ஆனால் பைபர்(Fiber) நிறைந்தது. வயிற்று பை  மற்றும் குடலை சுத்தம் செய்வதற்கு மிகவும் பயன்படும். குடலில் உள்ள சகல அழுக்குகளும் வெளியேறி விடும். வாழைப்பூ குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது. வாழைப்பழங்கள் மலச்சிக்கலை  நீக்கி விடும்.

மோசமான மலச்சிக்கல்



மலச்சிக்கல் என்பது மிகவும் மோசமானது. இன்றைய கால கட்டத்தில், அதிகம் நேரம் பிரயாணம் செய்பவர்கள் மற்றும் சிலர், மலத்தை அடக்கி அடக்கி, மலம் வெளியேற்றும் தசைகள் மற்றும் நரம்புகள் செயலற்று போக வைத்து விடுகிறார்கள். வயது ஆகும் போது  தான் இறுகிப்போன தசைகள் தனது  சுய ரூபத்தை காட்ட  ஆரம்பிக்கின்றன. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு, சிந்திக்கும் திறன் குறைய ஆரம்பிக்கிறது; கோபம்  அதிகமாக வரும்; பொறுமை இருக்காது. மலச்சிக்கலை போக்க நிறைய வழிகள் உள்ளன. மிகவும் சுலபமான வழி - அதிகம் தண்ணீர் குடியுங்கள்; அல்லது  தண்ணீர் நிறைந்த பானங்கள் அருந்துங்கள்; இரவு நேரம் படுக்கும் முன்பாக, கொதிக்க வைத்து ஆற வைத்த  வெது வெதுப்பான தண்ணீரை அருந்தி விட்டு படுத்தால், வயிற்று தசைகள் நன்றாக விரிந்து, மறுநாள் காலையில் சுலபமாக மலம் வெளி வந்து விடும். பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும். மிகவும் முக்கியமாக - பப்பாளி பழங்கள், வாழைப்பழங்கள் இவை நல்லது. நமக்கு கொஞ்சமும் தேவையில்லாத பொருட்களை உடலில் தேக்கி வைத்து என்ன லாபம்?  திருமூலர் சொன்ன வாக்குகளை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் - "உடல் வளர்ப்பது உயிர் வளர்ப்பது ஆகும்".


Monday, September 23, 2019

Abbreviations : (Related to Banking)


When it comes to the examinations conducted by IBPS and other agencies for recruitment of clerks and officers in commercial banks in India, the candidates are in a position to appear for preliminary and final examinations. "Current affairs which include banking awareness" is one among the subjects earmarked for the final examination and candidates are many times asked to provide the details of abbreviations related to banking and the present handbook is a collection of such abbreviations and the handbook is useful for the candidates in updating their knowledge about such abbreviations.
For example:
REER - Real effective exchange rate
SARFAESI - Securitisation and reconstruction of financial assets and enforcement of security interest act.
The question may be like this: When it comes to the term called as CAMEL, what do you know by the letter "M"? . The answer is M - Management (CAMEL = Capital adequacy, Asset quality, Management, Earnings and Liquidity)
This apart, the handbook can be used by the readers who are willing to improve their knowledge about banking and also the bank employees who are appearing for their promotion examinations.