"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்" - இது தான் பழமொழி.
இது தண்ணீருக்கும் பொருந்தும். ஆனால், ஒரு மனிதனுக்கு தேவையான தண்ணீர் ஒரு டம்ளர்; இரண்டு டம்ளர் அல்லது நான்கு டம்ளர் என்று வரை படுத்த முடியாது.
தண்ணீரின் தேவையானது, வெயில் காலங்களில் கூடுதலாக இருக்கும்; அதிகம் உடல் சம்பந்தமான வேலை செய்யும் போது , தேவை கூடுதலாக இருக்கும்.
குளிர் காலங்களில் தேவை குறைவாக இருக்கும்; குளிர் சாதனம் செய்யப்பட்ட அறைகளில் வேலை செயும்போது தேவை குறைவாக தோன்றும்.
தண்ணீரின் தேவையை ஒரு மருத்துவர் நமக்கு சொல்ல முடியாது. நமது உடல் நமக்கு சரியாக தெரியப்படுத்தும். இதற்கு மேல் தண்ணீர் வேண்டாம் என்று உடல் மொழி மூலம் அறிய வரும்போது, தண்ணீர் குடிப்பதை அறவே நிறுத்திவிடவேண்டும்.
அதிகம் தண்ணீர் குடிப்பதால் அதிகம் தீமை என்று சொல்ல முடியாது. சிறுநீரகம், தேவைக்கு அதிகமான தண்ணீரை service செய்வதற்கு அதிகம் பிரயத்தனம் செய்ய வேண்டிவரும். சிறுநீரகத்திற்கு வேலைப்பளு அதிகமாகி விடும்.
சிலர் வெளியேறும் மூத்திரத்தின் நிறத்தை வைத்து தண்ணீரின் தேவையை அளவிட சொல்லுவார்கள். ஆரோக்கியமான உடலிலிருந்து வெளியேறும் மூத்திரமானது ஓரளவு மஞ்சள் நிறம் கலந்து இருக்கும். மஞ்சள் நிறமானது, உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவதை தெரியப்படுத்துகிறது. கடும் மஞ்சள் அல்லது கடும் ஆரஞ்சு நிறமாக மாறும்போது உடலில் சில கோளாறுகள் இருக்கின்றன என்று அர்த்தம். வெள்ளை வெளேரென்று வெளியேறும்போது, தண்ணீர் தேவைக்கு அதிகமாக உடலில் இருக்கிறது என்று அர்த்தம்.
எனவே, உடலின் தேவையை அனுசரித்து, தண்ணீர் அருந்துவது மிகவும் நல்லது. தண்ணீர் அதிகம் அருந்தி விட்டதால், அதிகம் கவலை கொள்ளவும் தேவையில்லை.