Shareholic

Wednesday, July 17, 2013

பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" ஒரு தமிழர் !!!!






பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" ஒரு தமிழர் !!!!
ஆதாரம் ;
1. வீட்டு விசேஷங்களில் மாற்றிமாற்றி மொய்
செய்துகொள்ளும் தமிழர் பாரம்பரிய
முறையை பின்பற்றி "லைக்" செய்யும்
முறையை அறிமுக படுத்தியுள்ளார்.
2. மகிழ்ச்சி, தளர்ச்சி, குறைகளை மற்றவர்ககளிடம்
பகிர்ந்து கொள்ள "share" செய்யும் முறை!
3. திண்ணை யில்
அமர்ந்து வெட்டி அரட்டை அடிப்போருக்கான "comment"
"chat" செய்தல் முறை.
4. சும்மா இருப்பவனைத் தூண்டி விட்டு வம்பளக்க
வைக்கும் தமிழரின்(திராவிட) சிறப்பை உணர்த்தும்
"poke" (உசுப்பி விடுதல்) பட்டன்.
5. கூட்டமாக சென்று வம்பு செய்ய "group"
6. சுய தம்பட்டம் அடிக்க "profile"
7. கோர்த்து விட்டு கூத்து பார்க்க "Add tag"
8. "நான் செத்தாலும் என்னை பார்க்க வராதே"
என்னும் வீராப்பு பார்ட்டி களுக்காக "Unfriend"
"Block this person"
9. புரளிகள் பரப்ப , கிசுகிசு பேச "messages"
10. திக்குத் தெரியாத முட்டுச் சந்தில்
வைத்து அடிக்க, துண்டு போர்த்தி அடிக்க "fake id"
இப்படி தமிழரின் பாரம்பரிய
பெருமைகளை காப்பாற்ற பேஸ்புக்
கை உருவாக்கிய "மார்க்" அவர்களை அமெரிக்க
சனாதிபதி ஆக்க பரிந்துரை செய்யுமாறு தமிழர்கள்
சார்பாக கேட்டுக் கொள்கிறேன்..
படித்தவுடன் மறவாமல் மொய் எழுதிச் செல்லவும்.
அதாங்க "like" பட்டன் !!
கற்பனை; செந்தில் குமார்

No comments: