Shareholic

Monday, July 1, 2013

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்.



Achievers--1 பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின். (216) (The wealth of a man of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a village.) He is not a Bill Gates! Not a Warren Buffet or a RockFeller! 


A humble Banker...after retirement has done a noble act of sharing his wealth among four of his loyal Lieutenants who stood by him through thick and thin for over two decades. Started his life from the grass-root, retired as General Manager of a PSB((enjoying 4th position at that time). He was the General Secretary of Canara Bank Employees Union, GS of CBOA, GM (Personnel) Member of Negotiating Team in IBA and a votary of the Pension scheme for Bankmen. 23 Years ago, a few months before his Superannuation, he planned his future after Retirement. 


Not having deep knowledge of Computers did not deter him from taking the plunge to start a Computor Aided Design Centre for re-educating the thousands graduated from the Universities every year.. A seed sown 2 decades ago has now grown into a Banyan tree giving livelihood for 500 Managers and 4000 Emploees. Mr Narayana Moorthy is credited with ESOP concept in India and made even his Car-Driver a Crorepathy. 


But this Great Man shared his wealth(the company was posting a T/O of more than Rs300Crore annually) among the FOUR Lieutenants by making the Organisation into four divisions. The Four are given full independence inthe true sense and he remains only as Chairman of the Group without stakes. He is none other than the Bhishma Pithamaka of Canara Bank, also affectionately known as Easwer in his Organisation. A great Visionary and philanthropist par excellence among Bank Pensioners! 'Ever Green Smile, a merciful heart and always extending a helping hand Pensioners and the Poor are the HALLMARKs of this GREAT ACHIEVER! 


பொதுநலத்தின் உள்ளே ஒரு சுயநலம்! எண்ணங்கள் மற்றும் மனப்பாங்கு ஆகிய இரண்டும் ஒருவரது வெற்றியை மட்டுமல்லாது, வாழ்க்கைத் தரத்தையும் தீர்மானிக்கும் மிக முக்கிய காரணிகளாகத் திகழ்கின்றன. வாழ்வது ஒருமுறை... அதை மகிழ்ச்சியாக வாழ்வோம். ஈஸ்வர், இந்தியாவின் மிகவும் புகழ் வாய்ந்த வங்கியில் உயர் பொறுப்பில் பணியாற்றி 23 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர். 'உத்தியோகம் புருஷலட்சணம்' என்ற திடமான நம்பிக்கையுடன் தமது வாழ்க்கையைக் கடைபிடிப்பவர். ஓய்வு பெறும் காலம் நெருங்கும்போதே, 'ஓய்வுக்குப் பின், தான் யார்..?' என்று சிந்திக்கத் தொடங்கி விட்டார் ஈஸ்வர். 


உயர் பொறுப்பில் இருந்துவிட்டு பிறரிடம் சென்று வேலை செய்வதில் அவருக்கு உடன்பாடில்லை. சொந்தமாக ஏதாவது செய்வதே தனது எதிர்காலத்துக்கு நல்லது என்று முடிவெடுத்து, ஓய்வுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே தமக்கு சற்றும் பரிச்சயமில்லா விட்டாலும், கணினி சார்ந்த தொழில் ஒன்றைத் தொடங்கினார். விளம்பரம் மூலம் ஆட்களை வரவழைத்து, நேர்காணல் செய்து சிலரைத் தேர்ந்தெடுத்தார். கம்ப்யூட்டர் பற்றிய பெரிய ஞானமோ, அத்துறைக்கான வளர்ச்சியோ இல்லாத காலகட்டமாதலால், புதிய தொழில் அவருடைய சம்பளம், சேமிப்பு, பின்னர் வந்த ஓய்வூதியப் பணம் அத்தனையையும் சாப்பிட்டு நின்றது. நிதி மேலாண்மையை மட்டும் ஈஸ்வர் கவனிக்க மற்ற வேலைகளை பணியாளர்கள் பார்த்து வந்தனர். 


ஆரம்பம் சற்று மந்தமாக இருந்தாலும், எதிர்காலம் கம்ப்யூட்டர் காலம்தான் என்பதில் அவர் காட்டிய உறுதிக்கு சில வருடங்களுக்குப் பின் பலன் இருந்தது. தொழில் வெற்றிப் பாதையை நோக்கி முன்னேறத் தொடங்கியது. பத்தாண்டுகளில் தொழில் ஸ்திரமடைந்து, லாபம் ஈட்ட ஆரம்பித்தது. ஒரு தொழில் முனைவருக்கே உரிய சிரத்தையுடன் ஓய்வுக்குப் பின்னும் ஓயாது உழைத்த ஈஸ்வரின் திடமனதுக்கான வெற்றி கைகூடியது. வெற்றி பெற்ற பல நிறுவனங்களில் நடக்கும் இயல்பான நிகழ்வுதான் இது. இதற்குப் பின்தான் இருக்கிறது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. நிறுவனம் லாபம் ஈட்ட ஆரம்பித்தவுடன் தன்னுடன் ஆரம்பத்திலிருந்தே பணியில் ஈடுபட்டிருந்தவர்களை அழைத்து, தொழிலை எவ்வாறெல்லாம் மேம்படுத்தலாம் என்று விரிவான ஆலோசனை செய்தார்.


 வளர்ச்சியை நான்கு பிரிவுகளாகப் பிரித்தார். ஒவ்வொரு பிரிவையும், ஒரு நிறுவனமாக்கி அதன் பொறுப்பை நால்வருக்கும் பகிர்ந்து அளித்தார். நிறுவனங்கள் அனைத்திலும் மேலாளர்களுக்கு சரிசம பங்குகளை அளித்து, தனக்கு சமமான முதலாளிகளாக்கினார். நிறுவன சொத்துக்கள் அனைத்தையும் நான்கு பங்குகளாக்கி நால்வருக்கும் பிரித்தளித்து அளித்தார். நான்கு நிறுவனங்களும் எந்நாளும் போட்டி போடாதபடி வளர்ச்சிப் படிகளை அமைத்து நான்கு வெவ்வேறு திசைகளில் பயணிக்க வைத்தார். நன்றாக கவனியுங்கள். பிரித்துக் கொடுக்கப்பட்டது, ஈஸ்வரின் பணம். பிரித்துக் கொடுக்கப்பட்ட நிறுவனம், அவரது உழைப்பில் எதிர்காலக் கனவோடு தனக்காக துவங்கப்பட்ட நிறுவனம். ஈஸ்வரின் நண்பர்கள் 'என்னாச்சு..?' என்று கேலி செய்தனர். உறவினர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். எதையும் பொருட்படுத்தாமல், 'நல்லதே நடக்கும்!' என்றார். 


1999 ஆம் ஆண்டு முதல் நான்கு நிறுவனங்களும் தங்கள் பாதையில் நடக்கத் தொடங்கி, வேகமெடுத்தன. இன்றைக்கு நமது கதாநாயகனின் வயது 83. இவர் ஆரம்பித்த நிறுவனத்தின் வயது 25. ஆண்டு வருமானம், ரூ.300 கோடிக்கும் மேல். மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை, 4 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. 58 வயதுக்கு மேல் ஓர் தொழிலை நிறுவி, 4,000 குடும்பங்களுக்கு வாழ்வளித்து, 500&க்கும் அதிகமான மேலாளர்களை உருவாக்கி இன்று நாட்டின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக வளர்த்தெடுத்து, வழிநடத்தும் இவரின் எண்ணங்களை நாம் ஒவ்வொருவரும் கடைபிடி க்கலாமே!ரூ.10,000 மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கும் தனது தகுதியை, இன்று பலமடங்கு உயர்த்திக் கொண்டுள்ளார் ஈஸ்வர்.


 83 வயதிலும் பல மடங்கு அதிக வருமானம் ஈட்டும் நபராக மாறியுள்ளார். கனவும் திட்டமும் அவருடையது தான். அவர் நினைத்திருந்தால், தாமே இத்தகைய வளர்ச்சியை அதே மேலாளர்களை வைத்தே அவர் நிகழ்த்திக் காட்டியிருக்க முடியும். ஆனால், தனது ஓய்வையும் ஆனந்தமாக, எவ்விதப் பதற்றமும் இன்றி கழிக்கும் அவர், தாம் எதிர்பார்த்த வளர்ச்சியையும் எட்டிப் பிடித்திருக்கிறார். தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்ததும், தமக்கு ஆரம்ப காலத்தில் தோள் கொடுத் தவர்களைத் தட்டிக் கொடுத்து உயரே தூக்கிவிட்டதும், தனக்கு நிகராக அவர்களை வளர்த்து விட்டதும் அவரது பொதுநல குணம். இதில், தமக்கான எதிர்காலத்துக்காக திட்டமி ட்டது மட்டுமே சுயநல குணம். தனது உழைப்பில் சம்பாதித்த சொத்துக்களை அடமானமாக வைத்து இந்த நிறுவனங்களுக்குத் தேவைப்பட்ட முதலீடுகளை அவ்வப்போது செய்துள்ளார் ஈஸ்வர்.


 மற்றவர்களை வளர்த்து, தானும் வளரும் தைரிய மனப்பாங்கு கொண்ட எத்தனை ஈஸ்வர்கள் நம்மிடையே இருக்கின்றனர்..? நீங்களும் நானும் ஏன் இன்னும் ஈஸ்வர்களாக மாறக்கூடாது..? மகிழ்வித்து மகிழ்வோம்!

No comments: