நம்ம ஊரிலும் பேரிச்சம்பழம் விளையும்...!!!!!
பேரிச்சைமரம் வளர்த்து வெற்றி கண்ட சாதனை மனிதர் திரு. S. நிஜாமுதீன்..!
பன்னாட்டு நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் வறட்சியை தாங்கி வளரும் பயிருக்கு மரபணு மாற்றம் (வறட்சியை தாங்க), மாற்றுப்பயிர் (உ.த. காட்டாமணக்கு ) என கோடிகளில் செலவு செய்து விவசாயிகளை மேலும்
குழப்பத்திலும், நஷ்டத்திலும் வாழ வைத்து, அவர்கள் தற்கொலையை நோக்கி போய்கொண்டிருக்கும் வேளையில் வறட்சியை தாங்கி, செலவும் பராமரிப்பும் குறைந்த...
அதிக லாபம் தரும் ஒரு நீண்ட கால மாற்றுப் பயிரை அறிமுகப்படுத்தி தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ஒரு விவசாய அமைதி புரட்சியை செய்து கொண்டிருப்பவர் தருமபுரி விவசாயி திரு.S.நிஜாமுதீன்.
திரை கடலோடி திரவியம் தேடி கூடவே ஒரு மாற்றுப்பயிரையும் கண்டு அதனை தன் நிலத்திலேயே நட்டு சோதனை செய்து வெற்றியடைந்த பின் அறிமுகம் செய்து இன்று சுமார் 2000 ஏக்கர் தமிழகத்திலும் சுமார் 700
ஏக்கர் அண்டை மாநிலங்களிலும் விரும்பி பயிரிடப்படுகின்றது என்பது திரு.S.நிஜாமுதீன் அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
கீழ்கண்ட நன்மைகள் இதைப் பயிரிடுவதால் கிடைக்கின்றது.
1. குறைந்த நீர்.
2. பராமரிப்பு செலவு குறைவு.
3. ஆடு,மாடுகள் சேதப்படுத்துவதில்லை.
4. களர் நிலத்திலும் வளர்கிறது.
5. நீண்ட நாட்கள் பழங்களைப் பதப்படுத்தி பாதுகாக்கலாம்.
6. நீண்ட காலப்பயிர் 5-100 ஆண்டுகள் வரை.
7. நல்ல மகசூல் சுமார் 100 - 300 கிலோ/ஆண்டு.
8. விளைச்சலுக்கு நல்ல விலை கிடைக்கின்றது.
9. சிறந்த சத்துள்ள (இரும்புச்சத்து) பழம்.
10. தரிசு நிலம் மேம்படுவதோடு வேலை வாய்ப்பும் பெருகுகின்றது.
11. முக்கியமாக அந்நிய செலவாணி மிச்சப்படுகிறது.
உலகிலேயே பேரீட்சையை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான் !!!???
இறக்குமதியை குறைத்தாலே அந்நிய செலவாணி மிச்சப்படுகிறது. எனவே தமிழக அரசும், மத்திய அரசும் தங்கள் திட்டங்களில் இதனை அறிமுகம் செய்தால் அடுத்த 10-20 ஆண்டுகளில் நிறைய அந்நிய செலவாணியை மிச்சபடுத்த முடிவதோடு நிலத்தின் பயன்பாட்டையும் அதிகரிக்கமுடியும்.
மிகச் சிறந்த ஒரு மாற்றுப்பயிரை நமக்கு அறிமுகம் செய்த திரு.S.நிஜாமுதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் தொடர்புக்கும் விளக்கங்களுக்கும்
கீழ் கண்ட வலைதளத்தைக் காணுங்கள். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
http://www.datesindia.com/
தண்ணீர் பற்றாகுறை, அதிக உர விலை, என கவலையில் இருக்கும் விவசாயிகளிடம் இந்த மரம் குறித்த தகவல்களை கொண்டு செல்ல வேண்டும். வேளாண்மை துறை முயற்சி எடுத்து இதனை கவனிக்கவேண்டும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து அவர்களை மேலும் மேலும் பணக்காரர்களாக்குவதை விட, தற்கொலை செய்து தன் இன்னுயிரை மாய்த்து கொண்டிருக்கும் நம் விவசாய மக்களின் அவல நிலை மாற்றப்படவேண்டும், அதற்கு இந்த மரப்பயிர் துணை புரியும். கவனிக்குமா அரசு ?!!
♥, தமிழ் -கருத்துக்களம்-
No comments:
Post a Comment