வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல், தேடேன் பெருங்காயம்!
ஏரகத்துச் செட்டியாரே!
இது சித்தர்களின் பா¢பாஷையில் எழுதப்பட்டதொரு பாடல். புலவர்களில் சிலர், மறைமுகச்சித்தர்களாக விளங்கினார்கள்.
சித்தர்கள், ¡¢ஷிகளில் பல மாதி¡¢யான மனப்பான்மை,குறிக்கோள்கள்,நடைமுறை,சித்தாந்தம் முதலியவற்றைக ்கொண்டவர்களாக விளங்கினர்.
சிற்சில அடிப்படைகளில் அவர்களை வகைப்படுத்திப் பி¡¢த்து விடமுடியும்.
சிலர், உடலைப்பக்குவப்படுத்தி மூப்பு, நரை, நோய், நொடி,இல்லாமல் நீண்டகாலம் இருக்கப் பார்ப்பார்கள். சிலரோ இறக்காமலேயே இருந்து விடவேண்டும் என்று எண்ணுவர்.
பலவகையான உணவுக்கட்டுப்பாடுகள், ஹடயோக, ராஜயோகப் பயிற்சிகள், சமாதிநிலைகள், மருந்துகள் முதலியவற்றின் உதவியால் அவ்வாறு உடலைப் பக்குவப் படுத்துவார்கள். இதனைக்"காய சித்தி" அல்லது "காயகல்பம்" என்று கூறுவார்கள்.
காயம்" என்பது உடல்.
இறவாமையை நாடும் சிலர், அவ்வாறு நீண்ட காலம் இருந்தபின்னர், ஏதோ காரணம்
பற்றி அவர்களுடைய உடலை மேலும் யன்படுத்த முடியாமற் போனால், அந்த உடலைபோட்டு விட்டு, வேறொரு உடலுக்குள் பிரவேசித்துவிடுவார்கள். அவ்வுடலிலேயே வாழ்வார்கள். இந்த முறையை "பரகாயப்பிரவேசம்" அல்லது "கூடு விட்டுக் கூடு பாய்தல்" என்று கூறுவார்கள்.
காயகல்பத்தில் பயன்படுத்தும் மருந்துகள் பல இருக்கின்றன.அவற்றில், வீரம், பூரம்,
அயம் எனபவை சில.
அயம் என்றால் இரும்பு.
இரும்பை நெருப்பில் வேக வைத்து, "அய காந்த செந்தூரம்" போன்ற செந்தூரங்களைச் செய்து உட்கொள்வார்கள்
வேக வைத்த இரும்பு = வெந்த அயம் = செந்தூரம்
வேறு வகையான சித்தர்கள், ¡¢ஷிகள் இருக்கிறார்கள்.
அவர்கள் வந்த வேலையை மட்டுமே பார்ப்பார்கள்.
அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமையைச்செய்துவிட்டு, அவர்களுடைய கர்மவினை
களைக் கழித்துவிட்டு வந்த வழியே போகவேண்டிய இடத்திற்குப் போய் விடுவார்கள்.
பட்டினத்தார், ரமணர்,பரமஹம்ஸர் போன்றோர்.
இவ்வகைச்சித்தர்கள் உடலைப் பாரமாக நினைப்பார்கள்.கடைசியில் நான்கு பேர் தூக்கவேண்டிய பாரத்தை ஒருவனாகத் தூக்க வேண்டியிருக்கிறதே என்று துக்கிப்பார்கள்.
அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவர் பாடியதாக அமைந்ததே இந்தப் பாடல்.
வெங்காயம் = வெறுமையான, கூடான உடல்
சுக்கு = உலர்ந்த இஞ்சி; சரக்குகளிலேயே மிக நீண்ட நாட்களுக்குக்
கெடாமல் இருக்கக் கூடியது சுக்குதான்.
எகிப்திய பிரமிடுகளில் ஐயாயிரம் ஆண்டு வயதான சுக்கு கிடைத்திருக்கிறது. சித்தர் பா¢பாஷையில் சுக்கை "சுப்பிரமணி" என்றுதான் அழைப்போம்.
வெங்காயம் சுக்காவது = வெறும் உடம்பு காயகல்பமாகி விடுவது
வெந்தயத்தால் ஆவது = அதன் பின்னர் வெந்த அயம் போன்ற Tonic மருந்துகளும் தேவையில்லை.
ஆனாலும், இவ்வாறு காயகல்பமாகிவிட்ட இந்த சா£ரத்தில் நீண்ட நாள் உயிர் வாழ்வதால்தான் என்ன பயன்?
இது ஒரு வீண் பாரம்தானே?
ஆகவே,
இங்கு ஆர் சுமந்திருப்பார் இச்சரக்கை - இந்த உடலை?
ஏரகம் என்பது சுவாமிமலை.
குருவாய் இருந்து உபதேசம் பு¡¢ந்த இடமல்லவா அது.
முருகனை "செட்டி" என்று குறிப்பிடும் வழக்கு ஒன்று இருக்கிறது.
தேவாரத்தில், சுந்தரமூர்த்தி நாயனார்,
"செட்டியப்பன்" என்று சிவனைக் குறிப்பிடுகிறார்.
செட்டியாகிய முருகனின் அப்பன் சிவன்.
அருணகி¡¢நாதர் பல இடங்களில் செட்டி என்று முருகனைக் கூறுவார்.
செட்டியென்று மனமேவி இன்பரச
சத்தியின் செயனினாளை அன்புறாகத்
தெட்டிவந்து புலியூ¡¢ன் மன்றுள் வண் பெருமாளே!
-சேவல் விருத்தம்
புத்திப்¡¢யத்தன் - வெகு
வித்தை குணக்கடலன் - புகழ்
செட்டி சுப்பிரமணியன்
- திருப்புகழ்
இனமெனத் தொண்டரோடும்
இணக்கிடும் செட்டி காக்க
- ஷண்முகக் கவசம்
பாம்பன் சுவாமிகள்
சீரகம் = சீர் அகம் = மோட்சத்தைக் குறிப்பது
பெருங்காயம் என்பது பல பிறவிகளில் ஏற்படும் பல வகையான உடல்களைக் குறிக்கும்.
முருகன் மோட்சத்தைக் கொடுத்துவிட்டால் பிறவி எடுக்க வேண்டியிராதல்லவா?
ஏதோ ஒரு பலசரக்குக்கடைச் செட்டியா¡¢டம் கடைச்சரக்கைக் குறிப்பிடுவது போல்
பாடல் அமைந்திருக்கிறது அல்லவா?
No comments:
Post a Comment