ஒரு அமெரிக்க இளைஞனும், ஒரு சிவப்பு இந்திய இளைஞனும் ஒரு பாலை வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தனர். பொழுது சாய்ந்திடவே ஓரிடத்தில் தங்கள் கூடாரத்தினை அமைத்து அதனுள் இருவரும் படுத்தனர்.
இரவு சுமார் மணி மூன்று இருக்கும். சில்லென்று காற்று வீசவே சிவப்பிந்திய இளைஞன் விழித்துக் கொண்டான். நண்பனை எழுப்பிக்
கேட்டான், “மேலே பார். என்னதெரிகிறது?” என்று.
வெள்ளை இளைஞன் சொன்னான், “கோடிக் கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன” என்று.
சிவப்பிந்தியன் கேட்டான், “அப்புறம்?”
“வான சாஸ்திரப்படி சொன்னால் அந்த நட்சத்திரங்களைச் சுற்றி பலகோடி கிரகங்கள் இருக்கும் என்று தோன்றுகிறது.”
“அப்புறம்?”
“ஜோதிட சாஸ்திரப் படி சொன்னால் சனி கிரகம் சிம்ம லக்னத்திற்கு நகர்ந்துள்ளது.”
“அப்புறம்?”
“வானிலை சாஸ்திரப் படி சொன்னால் நாளை மேக மூட்டமிருக்கது.”
“ங்கொய்யால டேய் டேய், நம்ம கூடாரத்தை எவனோ ஆட்டய போட்டுட்டு போய்ட்டான் , அது தெரியாம வானம், நட்சதிரம்னுகிட்டு:-((( ""
நீதி :- முதலில் நம்மை சுத்தி என்ன நடக்குதுனு பாருங்க..அப்றம் எல்லைதாண்டி பாருங்க.!!
No comments:
Post a Comment