Shareholic

Wednesday, December 19, 2012

The universal "wife"dom



ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான்.

பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து, மருந்து ,இஞ்செக்ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. கடைசியில் அவனுடைய
புத்திசாலி மனைவி ஒரு நாள் சொன்னா, ‘நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு ,ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்)
போய்
உடம்மைபைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்கு சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்’னாள்.

என்னது மிருக டாக்டர்கிட்டேயா ? உனக்கென்ன மூளை கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.

‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான ் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு!
காலாங்காலத்தாலே கோழி மாதிரி விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க!
அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி ‘லபக் லபக்’னு ரெண்டு வாய் தின்னுட்டு ,
பயந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப் போறீங்க!
-
அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்கு கீழே வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க!
அப்புறம் ஆபிஸ் விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்கு வர்றீங்க! வந்ததும் வராததுமா,
நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை ‘சரக்
சரக்’னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!
-
மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்! இப்படி இருக்கிறவங்களை மனுஷ டாக்டர் எப்படிங்க குணப்படுத்த முடியும்?
அதனாலதான் சொல்றேன், நாளைக்கே ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்
மனைவி.
-
என்ன பதில் சொல்வதென்று தெரியாம கணவன் முழிக்க, கோட்டான் மாதிரி முழிக்காதீங்க’
போங்கன்னு உதாரணம் வச்சாளாம் மனைவி..

No comments: