Tuesday, December 31, 2019

கற்பூராதி தைலம்



குழந்தைகள் சளியில் அவதிப்படுகிறார்களா? மழை நேரங்களில்  தலை வலி, மூச்சு திணறல், சளி உபத்திரவம் போன்றவை கண்டிப்பாக இருக்கும். இதற்கு மிகவும் சுலபமான இந்த வழியை கடைபிடிக்கலாம். - தேங்காய் எண்ணெய்  ஒரு கரண்டியில் எடுத்துக்கொள்ளவும். அந்த கரண்டியில் ஒரு கற்பூர வில்லையை போடவும். இப்பொழுது அந்த தேங்காய் எண்ணெய் கற்பூர கலவையை அடுப்பில் வைத்து சூடு படுத்துங்கள். நன்றாக சூடு  ஆனவுடன் வெளியில் எடுக்கவும். பிறகு ஓரளவு ஆறியவுடன், தாங்கக்கூடிய சூடு வந்தவுடன், கையில் எடுத்து, குழந்தைகளின் நெஞ்சுப்பகுதியில் தேய்த்து வந்தால், சளி நீங்கி விடும். எந்தவிதமான எதிர் விளைவுகளும் கிடையாது.


No comments:

Post a Comment