Shareholic

Monday, September 23, 2019

Abbreviations : (Related to Banking)


When it comes to the examinations conducted by IBPS and other agencies for recruitment of clerks and officers in commercial banks in India, the candidates are in a position to appear for preliminary and final examinations. "Current affairs which include banking awareness" is one among the subjects earmarked for the final examination and candidates are many times asked to provide the details of abbreviations related to banking and the present handbook is a collection of such abbreviations and the handbook is useful for the candidates in updating their knowledge about such abbreviations.
For example:
REER - Real effective exchange rate
SARFAESI - Securitisation and reconstruction of financial assets and enforcement of security interest act.
The question may be like this: When it comes to the term called as CAMEL, what do you know by the letter "M"? . The answer is M - Management (CAMEL = Capital adequacy, Asset quality, Management, Earnings and Liquidity)
This apart, the handbook can be used by the readers who are willing to improve their knowledge about banking and also the bank employees who are appearing for their promotion examinations.

அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லதா அல்லது கெட்டதா?




"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்" - இது தான் பழமொழி.
இது தண்ணீருக்கும் பொருந்தும். ஆனால், ஒரு மனிதனுக்கு தேவையான தண்ணீர் ஒரு டம்ளர்; இரண்டு டம்ளர் அல்லது நான்கு டம்ளர் என்று வரை படுத்த முடியாது.
தண்ணீரின் தேவையானது, வெயில் காலங்களில் கூடுதலாக  இருக்கும்; அதிகம் உடல் சம்பந்தமான வேலை செய்யும் போது , தேவை கூடுதலாக இருக்கும்.
குளிர் காலங்களில் தேவை குறைவாக இருக்கும்; குளிர் சாதனம் செய்யப்பட்ட அறைகளில் வேலை செயும்போது தேவை குறைவாக தோன்றும்.
தண்ணீரின் தேவையை ஒரு மருத்துவர் நமக்கு சொல்ல முடியாது. நமது உடல் நமக்கு சரியாக தெரியப்படுத்தும். இதற்கு மேல் தண்ணீர் வேண்டாம் என்று உடல் மொழி மூலம் அறிய வரும்போது, தண்ணீர் குடிப்பதை அறவே நிறுத்திவிடவேண்டும்.
அதிகம் தண்ணீர் குடிப்பதால் அதிகம் தீமை என்று சொல்ல முடியாது. சிறுநீரகம், தேவைக்கு அதிகமான தண்ணீரை service செய்வதற்கு அதிகம் பிரயத்தனம் செய்ய வேண்டிவரும். சிறுநீரகத்திற்கு வேலைப்பளு  அதிகமாகி விடும்.
சிலர் வெளியேறும் மூத்திரத்தின்  நிறத்தை வைத்து தண்ணீரின் தேவையை அளவிட சொல்லுவார்கள். ஆரோக்கியமான உடலிலிருந்து வெளியேறும் மூத்திரமானது ஓரளவு மஞ்சள் நிறம் கலந்து இருக்கும். மஞ்சள் நிறமானது, உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவதை தெரியப்படுத்துகிறது. கடும் மஞ்சள் அல்லது கடும் ஆரஞ்சு நிறமாக மாறும்போது உடலில் சில கோளாறுகள் இருக்கின்றன என்று அர்த்தம். வெள்ளை வெளேரென்று வெளியேறும்போது, தண்ணீர் தேவைக்கு அதிகமாக  உடலில் இருக்கிறது என்று அர்த்தம்.
எனவே, உடலின் தேவையை அனுசரித்து, தண்ணீர் அருந்துவது  மிகவும் நல்லது. தண்ணீர் அதிகம் அருந்தி விட்டதால், அதிகம் கவலை கொள்ளவும்  தேவையில்லை.

நமது காலை உணவு என்னவாக இருக்கவேண்டும்?



உணவை பற்றி நினைப்பதற்கு முன்னால், நமது உடலின் இயக்கத்தை பற்றி புரிந்து கொள்ளுங்கள். இரவு பத்து மணிக்கு படுக்க செல்கிறீர்கள். காலை ஆறு மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்திருக்கீறீர்கள்.எட்டு மணி நேரம் எந்தவிதமான திரவ பொருட்களும் திட பொருட்களும் உடலுக்கு கொடுக்கப்படவில்லை.உடலானது அந்த எட்டு மணி நேர இடைவெளியில் முக்கியமான பணிகளை செய்கிறது. அதை நாம் overhauling என்று சொல்லலாம். சின்ன சின்ன கோளாறுகள் எல்லாம் சரி செய்யப்படுகின்றன. இரவு சாப்பாடுக்கு பின்னர், எந்தவிதமான உணவும் எடுக்கக்கூடாது என்பது உடல் ஆரோக்கியத்தின் விதியாகும்.
காலை எழுந்தவுடன், பல் துலக்கியவுடன், முடிந்த அளவு தண்ணீர் குடியுங்கள். ஒரு டம்ளர் முதல் மூன்று டம்ளர் வரை குடிக்கலாம். அது உடல் ஏற்றுக்கொள்ளும் தன்மையை பொறுத்தது,வெது வெதுப்பான நீர் போதுமானது. குளிர்ந்த நீர் கூடவே கூடாது. குளிர்ந்த நீர் குடலின் உட்புறத்தை சுருங்க செய்துவிடும். நாளடைவில் குடல் சுருங்கி விடும். ஒரு மனிதனின் சிறு குடலின் நீளமானது 20 அடியாகும். சுருங்கி சுருங்கி அது 15 அடிகளாகி குறைந்து விடும். வெது வெதுப்பான நீர் உள்ளே சென்றவுடன், உள்ளே இயக்கத்தை நிறுத்திவைத்திருக்கும் இரப்பை, குடல் போன்றவை புதிய வேலை கொடுத்தவுடன், சுறு சுறுப்பாகி விடும்.
தண்ணீர் குடித்து பதினைந்து நிமிடங்கள் சென்ற பின், ஒரு திரவ உணவு எடுத்துக்கொள்ளலாம். அது green tea யாக இருக்கலாம்; கேப்பைக்கூழ் ஆக இருக்கலாம் அல்லது உங்களுக்கு பிடித்த திரவ உணவை எடுத்துக்கொள்ளலாம். திரவ உணவு உடனே செரிக்கப்பட்டு இரத்தத்தில் கலக்கும்போது உடலில் சக்தி உடனே சேர்ந்து விடுகிறது. அதன் பின்னர் ஒரு மணி நேரம் கழிந்து காலை உணவு எடுத்துக்கொள்ளலாம். காலை உணவு ஒன்பது மணிக்குள்ளாக முடித்துவிடவேண்டும்.காலை உணவு மிருதுவானதாக இருக்கவேண்டும். அதனால் தான் இட்லி, பொங்கல், தோசை போன்றவற்றை ஹோட்டலில் பரிமாறுகிறார்கள்.உங்களுக்கு பிடித்தமான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை, கார உணவுகள் மற்றும் கடும் அசைவை உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
உடல் ஆரோக்கியத்தின் முக்கிய விதி - உடல் சாப்பிடவேண்டாம் என்று உணர்த்தும் பொது, சிறு துளி உணவும் உள்ளே செல்லக்கூடாது. இந்த விதியை பயன்படுத்தினால், எந்த விதமான வயிற்றுக்கோளாறுகளும் உங்களுக்கு வருவதில்லை.


புது செருப்பு கடிக்கும்



புது செருப்பு வாங்கியவுடன் எல்லோருக்கும் அதை அணிந்து சிறிது தூரம் வென்று விட்டு வர வேண்டும் என்ற ஆவல் கண்டிப்பாக இருக்கும்.
இந்த விஷயத்தில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய விபரங்கள் என்னவென்றால் - கண்டிப்பாக புது செருப்பு கடிக்கும்,. அதுவும் தோல் செருப்பு என்றாலே கேட்கவேண்டாம்.
அதிலும், cut shoe என்ற வகை காலணிகளை முதன் முதலாக அணிந்து வெளியில் சென்று விட்டு வந்தால், குதிங்காலில் கடிபட்டு சிவந்து விடும். மற்ற புண்களை போல அல்லாமல், இது மிக வேதனை தரும். இதற்கு நிவாரணம் என்ன?
வீட்டிற்கு வந்தவுடன், காலணிகளை கழட்டி விடுங்கள். நன்றாக சுத்தமான தண்ணீரால் கால் பாதங்களை கழுவவும். பாதங்களை நன்றாக துடைத்து விடவும். அழுகல் இல்லாத தக்காளி பழம் ஒன்றை எடுத்து அதை இரண்டு துண்டாக வெட்டவும். அதில் நடுப்பகுதியை ஒரு round biscuit அளவுக்கு வெட்டிவிடவும்.அந்த துண்டை கடி பட்ட இடத்தில நன்றாக அழுத்தி வைத்து, மெல்லிய துணியால் நன்றாக கட்டிவிடவும். படுத்து தூங்கிய பின்னர், காலையில் எழுந்தவுடன், துணியை எடுத்துவிட்டு பார்த்தால், புண் நன்றாக ஆறி இருக்கும். செலவில்லாத, எதிர் வினை செய்யாத வீட்டு வைத்தியம் இது.